Posts

Showing posts from October, 2025

🕉️ காரிய வெற்றியைத் தரும் வேல் வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் முக்கியமான காரியங்கள் தடை இல்லாமல் நிறைவேற வேண்டும் என்றால், தெய்வ அருள் அவசியம். சில நேரங்களில் நம்முடைய முயற்சிகள் வெற்றியடையாமல் போகலாம். அத்தகைய சமயங்களில் முருகனின் வேல் வழிபாடு நமக்கு காரிய வெற்றியை உறுதி செய்யும் என்று ஆன்மீக நூல்கள் கூறுகின்றன.

செல்வச் செழிப்புடன் வாழ அனைவருக்கும் பெருமாள் மற்றும் மகாலட்சுமி அருள் தேவை. ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஏகாதசி திதி, பெருமாளை வழிபட மிகவும் புண்ணியமான நாளாக கருதப்படுகிறது.

🌟 அபிஜித் நட்சத்திரம் – 28வது அதிசக்தி வாய்ந்த நட்சத்திரம் நட்சத்திரங்கள் மொத்தம் 27 எனலாம். ஆனால் அதற்கு அப்பாற்பட்ட மிகச் சூட்சுமமான, அதே சமயம் மிகுந்த சக்தி வாய்ந்த 28வது நட்சத்திரம் ஒன்றுண்டு — அது தான் அபிஜித் நட்சத்திரம். இது திருவோண நட்சத்திரம் வருவதற்கு முன்பாக மிகச் சிறிய நேரத்திற்கு மட்டுமே வரும்.

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்தில் ஒரு முக்கியமான காரியம் நடைபெற்றால் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நினைப்போம். அந்த காரியம் நடப்பதற்காக பல விதங்களில் நாம் முயற்சியும் செய்வோம். இருப்பினும் ஒரு சிலருக்கு ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாகவோ ஏதோ ஒரு தடைகளால் அந்த காரியம் நடக்காமல் போய்விடும். அப்படி நடக்காமல் தள்ளிப் போய்க் கொண்டிருக்கக் கூடிய நியாயமான காரியம் சரியான நேரத்தில் நல்ல விதத்தில் நடந்திட சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய அபிஷேகத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தான் பார்க்க போகிறோம்.

கந்த சஷ்டி விரத நாட்களில் ஆறாம் நாளாக சூரசம்காரம் திகழ்கிறது. அன்றைய நாளில் பலரும் முருகப்பெருமானை நினைத்து ஒருநாள் முழுவதும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று அங்கு நடக்கக்கூடிய சூரசம்கார விழாவில் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருளை பெறுவார்கள். விரதம் இருக்க இயலாதவர்கள் அன்றைய தினம் வழிபாட்டை மட்டுமாவது செய்வார்கள். விரதம் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, கோவிலுக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி வழிபாட்டை மட்டும் செய்பவர்களாக இருந்தாலும் சரி இந்த ஒரு சூட்சுமமான வழிபாட்டை செய்வதன் மூலம் சகல காரிய சித்தி உண்டாகும். அதைப்பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக முருகப்பெருமானின் கந்த சஷ்டி விரதம் திகழ்கிறது. இது தொடர்ச்சியாக ஆறு நாட்கள் இருக்க வேண்டிய விரதம் என்றாலும் ஒரு சிலரால் ஆறு நாட்களும் இருக்க இயலவில்லை என்னும் பட்சத்தில் ஆறாவது நாளான சூரசம்கார நாள் அன்று முழுமையாக விரதம் இருந்து முருகப்பெருமானின் அருளை பெறுவார்கள். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த ஆறாவது நாளான சூரசமஹார நாளன்று முருகப்பெருமானை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வளங்களை வாரி வழங்கக்கூடிய நாளாக தான் வளர்பிறை சதுர்த்தி நாள் திகழ்கிறது. எப்படி தேய்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் தீருகிறதோ அதே போல் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்க்கையில் அனைத்து விதமான வளங்களும் வளர்ந்து கொண்டே செல்லும்.

🌺 கந்த சஷ்டி நான்காம் நாள் வழிபாடு By Dhurga |🌿 அறிமுகம் வருடத்திற்கு ஒருமுறை வரும் கந்த சஷ்டி விரத நாட்கள் ஆறு நாள்கள் நீடிக்கின்றன. இந்த ஆறு நாட்களிலும் முருகப்பெருமானின் பக்தர்கள் விரதமிருந்து அவரை வழிபடுவார்கள். விரதம் இருக்க முடியாதவர்கள் வழிபாடு மூலமாகவே முருகப்பெருமானின் அருளைப் பெற விரும்புவர்.