செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவரும் செல்வம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர் பெருமாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட பெருமாளுக்கு உரிய வளர்பிறை ஏகாதசியாக தான் இன்றைய நாள் திகழ்கிறது என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.


அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த நாளில் ரகசியமாக நாம் செய்யக்கூடிய ஒரு வழிபாடு 

நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களையும் பெருக செய்யும். அந்த ரகசிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். செல்வத்தை வாரி வழங்கும் மந்திரம் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி நாளை தவறவிடாமல் யார் ஒருவர் பெருமாளை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களும் வளர்ந்து கொண்டே செல்லும் என்று கூறப்படுகிறது. 


அப்படிப்பட்ட வளர்பிறை ஏகாதசி என்பது ஜூலை மாதம் ஆறாம் தேதி வருகிறது. அன்றைய

தினத்தில் யாருக்கும் தெரியாமல் செய்யக்கூடிய ஒரு சூட்சுமமான வழிபாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.  இந்த வழிபாட்டிற்கு பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பெருமாளின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். 


சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை எடுத்து நன்றாக நுணுக்கி இரண்டு கைகளிலும் பெருமாளை நினைத்து தேய்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு மஞ்சள் நிற துணியில் ஏழு ஒரு ரூபாய் நாணயங்களை காணிக்கையாக கட்டி பெருமாளின் பாதத்தில் வைத்து விடுங்கள். பிறகு பெருமாளுக்கு முன்பாக ஒரு பஞ்ச பாத்திரத்தில் அல்லது டம்ளரிலோ தண்ணீரைப் பிடித்து அதில் துளசி இலைகளை போட்டுக் கொள்ளுங்கள். அதை கையில் வைத்துக்கொண்டு முழுமனதோடு பெருமாளின் பின்வரும் இந்த மூன்று மந்திரங்களை 11 முறை கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு இந்த துளசி தீர்த்தத்தை வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் அருந்தவேண்டும். இதே போல் துளசி செடி வைத்து வளர்ப்பவர்கள் கையில் தண்ணீரை வைத்து கொண்டு இதே மந்திரத்தை 11 முறை கூறி துளசி செடிக்கு ஊற்றுவதன் மூலம் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. 


இதே மந்திரத்தை 11 முறை எழுதுவதும் நல்ல பலனை தரும். 

இதே வழிபாட்டை நாம் பெருமாள் ஆலயத்திற்கும் சென்று பெருமாளை தரிசனம் செய்துவிட்டு இந்த மந்திரத்தை கூறலாம். -  மந்திரம் “ஓம் ஸ்ரீம் லலிதம் லம்போதரம் ஓம் ஸ்ரீம் லலிதம் நாராயணம் ஓம் ஸ்ரீம் லலிதம் சீனிவாசம்” இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டத்தை தீர்க்கும் வளர்பிறை ஏகாதசி வழிபாடு வளர்பிறை ஏகாதசியில் முழு மனதோடு பெருமாளை நினைத்து இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் அருளால் செல்வ செழிப்பு உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

Comments