பண வரவை அதிகரிக்கும் ஐந்து ரூபாய் வழிபாடு ஒவ்வொரு வாரத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமியை வழிபாடு செய்வதற்கு உரிய கிழமையாக திகழ்கிறது.
அன்றைய தினம் சுக்கிர பகவானுக்குரிய கிழமை என்பதாலும் சுக்கிர பகவானின் அதிதேவதையாக மகாலட்சுமி திகழ்வதால் அன்றைய நாள் மகாலட்சுமிக்குரிய நாளாகவே கருதப்படுகிறது.
அதோடு மட்டுமல்லாமல் பெண் தெய்வ வழிபாட்டிற்கும் உகந்த நாளாகவே வெள்ளிக்கிழமை திகழ்கிறது. அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமை ஆடி மாதத்தில் வரும்பொழுது அதற்கு இன்னும் அதிகளவில் பலன் உண்டாகும். அப்படிப்பட்ட அதிசக்தி வாய்ந்த ஆடி வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை நினைத்து செய்யக்கூடிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஐந்து ரூபாய் வழிபாடு மகாலட்சுமியை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய தரித்திரம் முற்றிலும் நீங்கும், செல்வ செழிப்பு உண்டாகும், குடும்பத்தில் சுபிக்ஷம் நிலவும் என்று கூறிக் கொண்டே செல்லலாம்.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மகாலட்சுமி தாயாரை ஆடி வெள்ளிக்கிழமை சாதாரணமாக வழிபாடு செய்வதை விட குபேர பகவானுக்குரிய ஐந்து ரூபாய் நாணயத்தை கையில் வைத்துக் கொண்டு வழிபாடு செய்ய அதற்கு அதிக அளவு பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த வழிபாட்டை இன்று இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை இன்று செய்ய இயலவில்லை என்பவர்கள் அடுத்து வரக்கூடிய ஆடி வெள்ளிக்கிழமையும் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஐந்து ரூபாய் நாணயம் மட்டும் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. இந்த வழிபாட்டை செய்பவர்கள் கண்டிப்பான முறையில் சுத்தமாக இருக்க வேண்டும். அதாவது குளித்திருக்க வேண்டும், அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் தீட்டு காலமாக இருக்கும் பட்சத்தில் இந்த வழிபாட்டை செய்யக்கூடாது.
இந்த வழிபாட்டை வீட்டு பூஜை அறையில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. எந்த இடம் அமைதியாக இருக்கிறதோ அந்த இடத்தில் இருந்து கொண்டு செய்யலாம்.
ஆனால் வடக்கு அல்லது கிழக்கு அல்லது வடகிழக்கு இந்த திசைகளை பார்த்தவாறு அமர்ந்துதான் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். தரையில் அமர்ந்திருப்பவர்கள் ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் அமர்ந்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். நம்முடைய வலது கையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து மகாலட்சுமி தாயார் இடம் பணம் தொடர்பான வேண்டுதலை முன்வைக்க வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாருக்குரிய பின்வரும் இந்த மந்திரத்தை 15 நிமிடம் நிறுத்தி நிதானமாக பொறுமையாக உச்சரிக்க வேண்டும்.
பிறகு திரும்பவும் மகாலட்சுமி தாயார் இடம் நம்முடைய பண வேண்டுதலை முன்வைத்து வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.
வழிபாட்டை நிறைவு செய்த பிறகு இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை ஒரு பேப்பரிலோ அல்லது கவரிலோ போட்டு பணம் வைக்கும் இடத்தில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். செலவு செய்யக்கூடாது. இந்த முறையில் ஆடி வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை ஐந்து ரூபாயை வைத்து வழிபாடு செய்யும்பொழுது பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும். மந்திரம்
“ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகர்ஷய ஆகர்ஷய மம வசமானய ஸ்வாகா”
Comments
Post a Comment