கடன் தீர்க்கும் செவ்வாய் ஹோரை பரிகாரம் யாரிடம் வேண்டுமானாலும் தங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டால் அவர்கள் முதலில் சொல்லக் கூடியது கடன் பிரச்சினை என்ற ஒன்றுதான்.

 



வறுமையில் இருப்பவர்களாக இருந்தாலும் பணக்காரராக இருப்பவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு சிறு தொகையாவது கடனாக அவர்களுக்கு இருக்கும். கடன் என்பது மிகப்பெரிய பிரச்சினையாகவே ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். செவ்வாய் ஹோரை பரிகாரம் கடன் கொடுப்பது மற்றும் கடன் வாங்குவது இவை இரண்டுமே மிகப்பெரிய பிரச்சினைகளை உருவாக்கக்கூடியது. இவை இரண்டிற்கும் காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான்.


 அதனால் தான் ஒருவரிடம் நாம் பணத்தை கொடுத்து திரும்ப நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் ஒருவரிடம் வாங்கிய பணத்தை நம்மால் திருப்பி தர இயலவில்லை என்றாலும் செவ்வாய்க்கிழமையில் முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு கடனுக்கு மிக முக்கிய காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானுக்குரிய கிழமையில் அவருக்குரிய ஹோரையில் நாம் செய்யக்கூடிய பரிகாரம் விரைவிலேயே கடன் பிரச்சினையை தீர்க்கும். 


 இந்த பரிகாரத்தை நாம் செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய செவ்வாய் கோரையில்தான் செய்ய வேண்டும். காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள், மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள், இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் வரக்கூடிய செவ்வாய் கோரையில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு கல் உப்பும் மிளகும் வேண்டும். கல்லுப்பும் மிளகும் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நீக்கக் கூடியதாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்து நாம் பரிகாரம் செய்யும் பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய கடன் என்ற எதிர்மறையாற்றல் நம்மை விட்டு விலகிச் செல்லும். இதற்கு நாம் சமையலுக்கு பயன்படுத்திய கல் உப்பையோ மிளகையோ பயன்படுத்தக்கூடாது. புதிதாக வாங்கி தான் பயன்படுத்த வேண்டும். மேலும் இதற்கு ஒரு கண்ணாடி கிண்ணம் அல்லது மண் அகல் விளக்கு வேண்டும். இவை இரண்டை தவிர்த்து வேறு எதையும் பயன்படுத்தக்கூடாது. செவ்வாய் ஹோரையில் ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கால் பங்கு கல் உப்பை போட்டு நிரப்பிக் கொள்ளுங்கள். பிறகு கருமையாக இருக்கக்கூடிய மிளகை 27 எண்ணிக்கையில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 


ஒவ்வொரு மிளகாக அந்த கல்லுப்பின் மேல் வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும் பொழுது கடன் பிரச்சினை முற்றிலும் தீர வேண்டும் என்று கூறிக் கொண்டே வைக்க வேண்டும். இவ்வாறு 27 மிளகுகளையும் ஒவ்வொன்றாக கல்லுப்பின் மீது வைத்து விட்டு அந்த கிண்ணத்தை கையில் வைத்துக்கொண்டு வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அறைக்கும் செல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக அந்த அறையின் நான்கு மூலைகளிலும் சென்று இந்த கிண்ணத்தை ஒரு நொடியாவது வைத்துவிட்டு வரவேண்டும். இப்படி வீட்டின் அனைத்து மூலைகளிலும் இந்த கிண்ணத்தை வைத்து முடித்த பிறகு இதை யாருடைய கைகளும் படாத அளவிற்கு ஏதாவது ஒரு இடத்தில் வீட்டில் வைத்து விடுங்கள். தொடர்ச்சியாக 15 நாட்கள் இது அப்படியே இருக்கட்டும். 15 நாட்கள் முடிந்த பிறகு அந்த கிண்ணத்தை எடுத்து அதில் இருக்கக்கூடிய கல் உப்பையும் மிளகையும் ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விட வேண்டும் அல்லது கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள் என்று அனைத்தும் நம்மை விட்டு விலகும். 



இவை அனைத்தும் விலகி விட்டாலேயே நம்மை தேடி பணம்வர ஆரம்பிக்கும். பணம் வந்தால் விரைவிலேயே கடனை தீர்த்து விட முடியும். 15 நாட்கள் கழித்து திரும்பவும் இதே போல் செவ்வாய்க்கிழமை செவ்வாய் கோரையில் இதே பரிகாரத்தை செய்யலாம். இதையும் படிக்கலாமே: பிரச்சினைகளை தீர்க்கும் கால பைரவர் வழிபாடு எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு யார் ஒருவர் செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் கோரையில் செய்கிறார்களோ அவர்களுக்கு எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும், கடன் பிரச்சனையும் படிப்படியாக விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.



"This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

·         Job Type: Mobile-based part-time work

·         Work Involves:

·          

o    Content publishing

o    Content sharing on social media

·         Time Required: As little as 1 hour a day

·         Earnings: ₹300 or more daily

·         Requirements:

·          

o    Active Facebook and Instagram account

o    Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9943990669

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"

 

Comments